குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புதிதாக அமைக்கப்பட்டு கடந்த 12 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்ட கிளிநொச்சி மாற்று வலுவுள்ளோர் சங்க கட்டடத்தின் தரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்த நிலையில் குறித்த கட்டடத்தின் வெடிப்பு பகுதிகளை ஒப்பந்த காரர்கள் பூசி மெழுகும் நடவடிக்கையினை மேற்கொண்டிருந்த நிலையில் அது நிறுத்தப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாற்று வலுவுள்ளோர் சங்கத்தின் புதிய கட்டடம் கட்டுமான பணிகளின் தரம் தொடர்பில் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் மாகாண சமூக சேவைகள் பணிப்பாளருக்கு பணித்திருந்த நிலையில் குறித்த கட்டடத்தின் வெடிப்புக்களை ஒப்பந்தகாரர்கள் பூசி மறைக்கும் செயற்பாடு மேற்கொண்டிருந்த நிலையில் அவை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான பசுபபதிபிள்ளை தவநாதன் ஆகியோரின் இருபது இலட்சம் ரூபா நிதியிலும், மாகாண சபை உறுப்பினர் அரியரத்தினம் அவர்களின் இரண்டு இலட்சம் ரூபாவுமாக 42 இலட்சம் ரூபாவுக்கு அமைக்கப்பட்ட புதிய கட்டத்தின் பல பகுதிகளில் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதோடு, 42 இலட்சம் ரூபா பெறுமதியில் கட்டடம் அமைக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகமும் ஏற்பட்டிருந்தது.
இது தொடர்பில் மாகாண சபை உறுப்பினர் பசுபதிபிள்ளை மற்றும் மாற்று வலுவுள்ளோர் சங்கத்தின் உறுப்பினர்கள் ஆகியோர் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்ததனை அடுத்து முதலமைச்சர் மேற்படி பணிப்புரையை வழங்கிய நிலையிலேயே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அது தடுக்கப்பட்டுள்ளது.