டோனி ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு ரவி சாஸ்திரி விளக்கம் அளித்துள்ளார்.இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பரும், முன்னாள் அணித்தலைவருமான டோனி இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியஅணி தோல்வியடைந்திருந்த நிலையில் நடுவரிடம் இருந்து ஒரு பந்தை கேட்டு வாங்கினார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தோல்வி அடைந்த ஆட்டத்தில் டோனி பந்தை வாங்கி சென்றதால் அவர் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போகிறாரோ? என கிரிக்கெட் ரசிகர்கள் சந்தேகத்தை எழுப்பியிருந்தனர்.
இந்த நிலையில், நாளிதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்த இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, டோனி, மைதானத்தின் தன்மை மற்றும் ஆடுகளம் பற்றி பொதுவான விஷயங்களை தெரிந்து கொள்வதற்காகவே பந்துவீச்சு பயிற்சியாளரிடம் விளையாட்டில் பயன்படுத்தப்பட்ட பந்தை காட்டினார்.
இது நடுவரிடம் இருந்து டோனி பந்தை வாங்கிச்சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என டோனி ஓய்வு குறித்து வெளியான ஊ10கங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.