இஸ்ரேலை யூத தேசம் என அறிவிக்கும் சர்ச்சைக்குரிய மசோதா ஒன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. எட்டு மணிநேரம் நடந்த விவாதத்திற்கு பின்னர் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 62 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு ஆதரவாகவும், 55 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்து உள்ளனர்.
இந்த மசோதாவானது, முழுமையான மற்றும் ஒற்றுமையான ஜெருசலேம்தான் இஸ்ரேலின் தலைநகரம் என்பதனை குறிக்கின்றது. இஸ்ரேலில் அதிகாரப்பூர்வ உத்தியோகபூர்வ மொழியாக அரபி இருந்து வருகின்ற நிலையில் இந்த மசோதாவானது அந்த தகுதியினை இழக்க வழிவகை செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதாவினை வரவேற்றுள்ள இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெட்டன்யாகூ இதனை முக்கியமான தருணம் எனத் தெரிவித்துள்ளார். மேலும் இந்த மசோதாவினை வரவேற்றுள்ள அந்நாட்டு வலதுசாரி அரசாங்கம் வரலாற்று ரீதியாக இஸ்ரேல் யூதர்களின் தாயக பூமி எனவும் அவர்களுக்கென சில பிரத்யேக உரிமைகள் இருக்கின்றன எனவும் கூறியுள்ளது