இந்திய மத்திய அரசு மீது தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது மக்களவையில் நேற்று காரசாரமான விவாதம் நடைபெற்றதன் பின்னர் இரவு 11 மணியளவில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது.
முதலில் நடைபெற்ற குரல் வாக்கெடுப்பை தொடர்ந்து அடுத்ததாக மின்னனு முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்படி அவையில் இருந்த 451 உறுப்பினர்கள் தீர்மானத்தின் மீது வாக்களித்தனர். அதில் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிராக 325 பேரும், ஆதரவாக 126 பேரும் வாக்களித்தனர்.
இந்தநிலையில் நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றமை குறித்து பிரதமர் மோடி, அரசுக்கு ஆதரவாக வாக்களித்த கட்சிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.