வெள்ளையர்களின் நிலம் கையகப்படுத்தப்பட மாட்டாது எனத் உறுதியளித்துள்ள சிம்பாப்வேயின் ஜனாதிபதி எம்மர்சன் நாங்காவா (emmerson-mnangagwa ) இன ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்துள்ளார். சிம்பாப்வேயில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் நடைபெற உள்ளநிலையில் இடம்பெற்ற பொது கூட்டம் ஒன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்,
சிம்பாப்வே முன்னாள் ஜனாதிபதியான ரொபேர்ட் முகாபே அரசாங்கம் நூற்றுகணக்கான வெள்ளைக்கார விவசாயிகளிடமிருந்து நிலத்தை கைப்பற்றுவதனை ஆதரித்திருந்தது.ஆனால், அவை கடந்த காலம் என தெரிவித்துள்ள எம்மர்சன் கறுப்பு விவசாயியோ, வெள்ளை விவசாயியோ, அவர் சிம்பாப்வே விவசாயி எனவும் தனது உரையில் வலியுறுத்தியுள்ளார்.