கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ வேகமாக பரவுவதால் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளிலிலிருந்து மக்களை வெளியேறுமாறு விடப்பட்டுள்ளது, அங்கு சுமார் 7 இடங்களில் தீப்பிடித்து எரிகின்றதாகவும் இதனால் அந்த பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சி அளிக்கின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காட்டுத்தீ வேகமாக பரவுவதால் வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் பல மின்கம்பங்கள், மின் கம்பிகள் எரிந்து நாசமாகி விட்டதனால் பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் அங்கு பெருமளவிலான திராட்சை தோட்டங்கள் உள்ளநிலையில் அவற்றினை காட்டுத் தீயில் இருந்து பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு படை வீரர்கள ஹெலிகொப்டர்கள் மூலம் நீர் தெளித்து வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.