குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொள்ளையடித்தார் என்று கூறினாலும் அவர் நாட்டை முன்னேற்றினார் என பேராதனை கெட்டம்பே ரஜமஹா விகாரையின் விகாராதிபதி கெப்பட்டிகொட சிறிவிமல தேரர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்காக விகாரையில் நேற்று நடந்த போதி பூஜையின் போது தர்ம உபதேசம் செய்யும் போதே சிறிவிமல தேரர் இதனை கூறியுள்ளார். நாட்டின் தற்போதைய அரசாங்கம் நாட்டை அபிவிருத்தி செய்யாது கொள்ளையடித்து வருவதாகவும் நாட்டின் அனைத்து வளங்களையும் விற்பனை செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சியில் ராஜபக்ச குடும்பத்தினர் மட்டுமல்லாது அவர்களை சுற்றியிருந்தவர்களும் நாட்டின் வளங்கள் மற்றும் சொத்துக்களையும் செல்வத்தையும் கொள்ளையடித்தனர் என குற்றம் சுமத்தப்படுகிறது. அவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகளும் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.