ஒழுக்கவிதிமுறைகளை மீறியதாக தெரிவித்து இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரரான தனுஷ்க குணத்திலக்கவிற்கு அனைத்து விதமான சர்வதேச போட்டிகளிலும் விளையாடுவதற்கு இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தடை விதித்துள்ளது.
ஒழுக்க நடவடிக்கை தொடர்பாக குணத்திலக்கவிடம் விசாரணை நடத்தப்பட இருப்பதால் அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கும் இவ்வாறு தடை விப்பதாக இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரின் ஆண்டு ஒப்பந்த ஊதியத்தில் இருந்தும் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்விதமான ஒழுக்க விதிமுறைகளை மீறினார் என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.