சென்னையில் இன்று மின்சார புகையிரதத்தின் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணம் செய்தபோது, தடுப்புச்சுவரில் மோதி விழுந்து பாடசாலை மாணவர்கள் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் காயமடைந்துள்ளனர். பலத்த காயமடைந்த அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்த 7 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை கடற்கரையில் இருந்து திருமால்பூர் நோக்கி சென்ற மின்சார விரைவு புகையிரதத்தில் சென்றவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். அதேவேளை நேற்று இரவும் பரங்கிமலை புகையிரத நிலையத்தில் நிகழ்ந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது