Home உலகம்கிரேக்கத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74 ஆக அதிகரிப்பு

கிரேக்கத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74 ஆக அதிகரிப்பு

by admin


கிரேக்கத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது. தீயை கட்டுப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்

கிரேக்கத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் 20 பேர் உயிரிழப்பு -100க்கும் மேற்பட்டோர் காயம்

Jul 24, 2018 @ 03:42

கிரேக்கத்தின் தலைநகர் ஏதென்ஸ் அருகே பரவிய காட்டுத்தீயில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் அவர்களில் 11 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களில் 16 பேர் குழந்தைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த தீயினை கட்டுப்படுத்த நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள போராடி வரும் நிலையில், அப்பகுதியிலுள்ள மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியை அண்மித்துள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் கருகி அழிவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படாத காரணத்தினால் ஐரோப்பிய நாடுகளின் உதவியை அந்hட்டு அரசாங்கம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More