விக்கிலீக்ஸ் இணைய தளத்தின் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜேயிற்கு வழங்கப்பட்ட வந்த அரசியல் தஞ்சத்தை ஈக்வடோர் அரசு ரத்து செய்ய முடிவு செய்துள்ளது, இதனால் அவரது 6 ஆண்டு கால மறைவு வாழ்க்கை முடிவுக்கு வர உள்ளது. அமெரிக்க ராணுவம் தொடர்பான ரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் இணையத்தில் வெளியிட்ட ஜூலியன் அசான்ஜேயை கைது செய்ய அமெரிக்கா நடவடிக்கை எடுத்தமையினால் அவர் 2012ம் ஆண்டு பிரித்தானியாவிலுள்ள ஈக்வடோர் தூதரகத்தில் அரசியல் தஞ்சமடைந்திருந்தார். இதனால் அவரை கைது செய்ய முடியாத நிலை காணப்பட்டது.
இந்நிலையில், அசான்ஜேயை தூதரகத்தை விட்டு வெளியேற்றி அவரை பிரித்தானியாவிடம் ஒப்படைக்க ஈக்வடோர் அரசு முடிவு செய்துள்ளது, அதன்படி எதிர்வரும் சில தினங்களில் அசான்ஜேயிற்கு அளிக்கப்பட்டு வந்த அரசியல் தஞ்சத்தை ரத்து செய்து அவர் தூதரகத்தை விட்டு வெளியேற்றப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அவ்வாறு அவர் வெளியேற்றப்படும் பட்சத்தில், பிரித்தானிய அரசு அவரை கைது செய்ய வாய்ப்புள்ளது மட்டுமல்லாமல், அவரை அமெரிக்காவிடம் ஒப்படைக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது