வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
தர்ம கர்த்தா சபைக்கும் ஆளூநர் சபைக்கும் இடையில் ஏற்பட்ட சில முரண்பாடுகளே கல்லூரிக்கு எதிரான போராட்டத்திற்கு காரணம் என யாழ்ப்பாண கல்லூரியின் அதிபர் டேவிட் சதானந்தன் சொலமன் தெரிவித்தார்.
யாழ்ப்பாண கல்லூரி நிர்வாகத்தில் அதிகார துஸ்பிரயோகங்கள் நடைபெறுவதாக குற்றம் சாட்டி பழையமாணவர்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை கல்லூரி முன்றலில் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.
குறித்த போராட்டம் தொடர்பில் அதிபரிடம் கருத்து கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், உடுவில் மகளீர் கல்லூரி போராட்டத்தின் பின்னரே தர்மகர்த்த சபை சில நிபந்தனைகளை விதித்தனர். அதனை ஆளுனர் சபையும் ஏற்றுக்கொண்டது. அதன் பின்னர் எந்த பிரச்சனையும் எழ வில்லை.
தற்போது ஆளுனர் சபையின் தலைவர், உப தலைவர் பதவி விலகி புதிய ஆளூநர் சபை உருவாக்க வேண்டும் என கோரியுள்ளார்கள். அது தான்தோன்றி தனமான செயற்பாடாக உள்ளது. அது தர்ம கர்த்தா சபைக்கும் ஆளூநர் சபைக்கும் இடையில் சில முரண்பாடுகள் ஏற்பட்டு உள்ளன. அதற்கு சில வகையான சக்திகள் உறுதுணையாக இருக்கின்றார்கள்.
ஆளுனர் சபை கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறும். அதன் போது சில விடயங்கள் தீர்மானிக்கப்பட உள்ளது. அதன் பின்னரே அடுத்த கட்டம் தொடர்பில் தெரிய வரும்.
போராட்டம் நடத்தியவர்கள் சில குற்ற சாட்டுக்களை முன் வைத்துள்ளார்கள். அதில் ஆசிரியர்கள் தனியார் வகுப்புக்களை நடாத்தி பணம் வாங்குகின்றார்கள் என அது சில ஆசிரியர்கள் தமது வருமானத்திற்காக அவ்வாறு வகுப்புக்களை நடாத்தவது வழமை அது தனியே எமது பாடசாலை ஆசிரியர்கள் மாத்திரமின்றி வேறு பாடசாலை ஆசிரியர்களும் நாடாத்து கின்றார்கள். அது அவர்களின் தனிப்பட்ட விடயம்.
விளையாட்டு துறை தொடர்பிலும் குற்றம் சாட்டி உள்ளனர். மாகாண மட்ட தட்டெரியும் போட்டியில் ,மாணவி ஒருவர் வெற்றி பெற்று உள்ளார், எமது பாடசாலை மாணவர்கள் விளையாட்டு துறையில் பிரகாசித்துகொண்டே இருக்கின்றார்கள்.
துடுப்பாட்ட போட்டியின் போது, மோதல் ஒன்று ஏற்பட்டு பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் ஒருவன் துரதிஸ்ட வசமாக உயிரிழந்து இருந்தார். அது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருவதனால் , பற்றிக்ஸ் கல்லூரியுடன் நடைபெறும் துடுப்பாட்ட போட்டிகள் இடை நிறுத்தப்பட்டன.
ஆனாலும் ஏனைய பாடசாலைகளுடன் துடுப்பாட்ட போட்டிகளில் மோதுகின்றன. துடுப்பாட்டத்திலும் எமது பாடசாலை மாணவர்கள் பிரகாசித்துக்கொண்டு இருக்கின்றார்.
கல்லூரி ஆசிரியர்கள் சம்பந்தமாக பல குற்ற சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு உள்ளன. ஆனால் அது எதனையும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆசரியர்கள் தொடர்பிலான கோவைகளை பார்வையிட முடியும் அனைத்து ஆசிரியர்களும் தகுதியானவர்களே. தகுதியற்றவர்களை நாங்கள் ஆசிரியர்களாக நியமிக்க வில்லை.
இங்குள்ள ஆசிரியர்கள் பத்திரமுல்லையில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டு வருட ஆசிரிய பயிற்சி பெற்றவர்களே என தெரிவித்தார்.
தர்ம கர்த்தா சபைக்கும் ஆளூநர் சபைக்குமான, முரண் நிலையே போராட்டத்திற்கு காரணம்…