வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள்,விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரனின் நேரடி நெறிப்படுத்தலுடனும் அவரது பங்கு பற்றுதலுடனும் வடக்கு மாகாண கல்வி வலயங்களில் இடம் பெற்று வரும் க.பொ.த சாதாரண தர மாணவர்களின் பெறுபேறுகளை உயர்துவதற்காக அதிபர்களுக்கான செயலமர்வும், அதிபர்கள்,ஆசிரியர்கள்,கல்வி சாராஊழியர்களின் நிர்வாக ரீதியிலான பிரச்சினைகளைத் தீர்க்கும் நடமாடும் சேவையும் நேற்று(25.07.2018) முல்லைத்தீவு கல்வி வலயத்தில் இடம் பெற்றது.
முன்னதாக காலை 9.00 மணிக்கு முல்லைத்தீவு வலயக்கல்வி அலுவலகத்தில் வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி புவனராஜா தலைமையில் ஆரம்பமானது. இதில் க.பொ.த சாதாரண தர பாடசாலைகளின் அதிபர்கள் கலந்து கொண்டனர் மாணவர்களின் பெறுபேறு அடைவு மட்டத்தை உயர்த்துவதற்கான புள்ளிவிபரங்கள் அடங்கிய விளக்கவுரையினை வடக்கு மாகாண பிரதிக்கல்விப்பணிப்பாளர் பிரட்லி வழங்கினார். மதியம் 1.30 வரை அதிபர்களுக்கான செலமர்வு நிறைவடைந்தது.
தொடர்ந்து மாலை 2.00 மணிக்கு அதிபர் ஆசிரியர்கள் கல்விசாரா ஊழியர்களுக்கான நடமாடும் சேவை இடம்பெற்றது. நடமாடும் சேவையில் 75 வரையான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று 58 முறைப்பாடுகளுக்கு உடனடித்தீர்வுகள் வழங்கப்பட்டன. மிகுதி மாகாண கல்வித்திணைக்களத்தில் பரிசீலிக்கப்பட்டு காலக்கிரமத்தில் அவர்களுக்கான தீர்வுகள் வழங்கப்பட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நடமாடும் சேவை மற்றும் அதிபர்களுக்கான செயலமர்வு ஆகிய செயற்பாடுகளில் வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள்,விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன்,கல்வி அமைச்சின் சிரேஸ்ட உதவிச்செயலாளர் திருமதி அங்சலி சாந்தசீலன் மாகாண கல்விப்பணிப்பாளர் உதயகுமார் கல்வி அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் அனந்தராஜ் மாகாண கல்வி அமைச்சின் நிர்வாக உத்தியோகத்தர் விஸ்வநாதன் உள்ளிட்ட மாகாண கல்வி அமைச்சின் அதிகாரிகள்,மாகாண கல்வித்திணைக்கள அதிகாரிகள் முல்லைத்தீவு வலயக்கல்வி அலுவலகத்தின் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தமது வேவைகளை வழங்கினர்.
1 comment
“58 முறைப்பாடுகளுக்கு உடனடித்தீர்வுகள் வழங்கப்பட்டன”. பணிகளை நன்றாகச் செய்துள்ளார்கள்.