ஈரானை அமெரிக்கா தாக்கினால், அமெரிக்கா வைத்திருக்கும் அனைத்தையும் அழித்து விடுவோம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானுடன் செய்து கொண்ட அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்கா, ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளதுடன் ஈரானை பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்தும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது.
இந்தநிலையில் ஈரானை தாக்க அமெரிக்க முயற்சி மேற்கொண்டால் அமெரிக்காவிடம் இருக்கும் அனைத்தையும் அழித்து விடுவோம் என ஈரான் சிறப்பு படை த்தளபதி காசிம் சோலிமனி பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். டிரம்ப் போரை தொடங்கினார் என்றால் இஸ்லாமிய குடியரசு அதனை முடித்து வைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.