குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
தற்போது வெளியாகியுள்ள வெட்டுப்புள்ளிகளின் பிரகாரம் 2017 க.பொ.த (உ/த) பரீட்சைக்கு தோற்றிய கிளிநொச்சி மகா வித்தியாலய கணித, உயிரியல் பிரிவு மாணவர்களில் 8 பேர் மருத்துவத்துறைக்கும் 8 பேர் பொறியியல் துறைக்கும்தெரிவாகியுள்ளனர்.
கடந்த 2013 ஆம் ஆண்டு இப் பாடசாலையில் கணித விஞ்ஞான பிரிவுகளை ஆரம்பிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது கல்வி புலத்தில் பலர் தங்களின் எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர் அருகில் இரண்டு பாடசாலைகளில் கணித விஞ்ஞான பிரிவுகள் உள்ள பாடசாலை உள்ள போது கிளிநொச்சி மகா வித்தியாலயத்திலும் ஆரம்பிப்பது தேவையற்ற ஒன்று எனவும் தெரிவிக்கப்பட்டது.ஆனால் இந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் பாடசாலையில் கணித விஞ்ஞானப் பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டன.
இதன் முதலாவது அணி 2015 இல் பரீட்சைக்குத் தோற்றியது. இந்த முதலாவது அணியிலிருந்து மருத்துவத்துறைக்கு ஒருவரும் பொறியியல்துறைக்கு இரண்டு பேரும் தெரிவாகினர்.பின்னர் 2016 இல் மருத்துவத்துறைக்கு நான்குபேரும் பொறியில் துறைக்கு நான்கு பேரும் தெரிவாகினர்.
தற்போது 2017 இல் இரண்டுதுறைக்கும் எட்டுப்பேர் எ தெரிவாகியுள்ளனர். அந்த வகையில்
பொறியியல் துறைக்கு
1.ப.தேனுகன்
2.பா.சரத்குமார்
3.ஜெ.பூவள்ளல்
4. ம.லினுசன்
5.சி.ஜெயபிரகாஷ்
6.ப.கஸ்தூரி
7.ப.தயாளன்
8.தெ.டிலக்சன்
₹ மருத்துவத்துறைக்கு
1. ஜெ.கஜீபன்
2.ஜெ.சத்தியதரண்ஜா
3.அ.கபிலன்
4. பு.புருகாஷினி
5.அ.தனுஜன்
6.ர.சுஸ்மிதா
7.சி.கெளதமன்
8.ந.சாமந்தி
அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் 10 பேர் மருத்துவத்துறைக்கும், 13 பேர் பொறியியல் துறைக்கும் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.