குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வடமாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களிலும் உள்ள சுகாதார திணைக்களங்களின் பணியாளர்களுக்கு இடையிலான மைதான விளையாட்டு போட்டிகள் நேற்று வெள்ளிக்கிழமை(27) மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ்.ஆர்.யூட் தலைமையில் இடம் பெற்ற குறித்த போட்டியினை வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.
நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பமான குறித்த விளையாட்டுப்போட்டி நாளை ஞாயிற்றுக்கிழமை மாலையுடன் நிறைவடையும். சுகாதார திணைக்களங்களில் கடமையாற்றும் பணியாளர்களுக்கு தொற்றா நோய் தொடர்பான விழிர்ப்புணர்வையும், விளையாட்டு, உடற்பயிற்சி போன்ற வற்றின் அவசியம் தொடர்பில் விழிர்ப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலே குறித்த விளையாட்டு போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.