குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் அனுசரணையுடன் மன்னார் இளைஞர் சேவை மன்றத்தின் ஏற்பாட்டில்; மடு மற்றும் நானாட்டான் பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள இளைஞர் யுவதிகளை ஒன்றிணைத்து இரு பிரதேசங்களிலும் இளைஞர் முகாம் நேற்று சனிக்கிழமை (28.07.18) இடம் பெற்றது.
பிரதேச இளைஞர் சேவை அதிகாரிகளின் தலைமையில் இடம் பெற்ற குறித்த முகாமில் இளைஞர்கள் மத்தியில் ஆளுமை மற்றும் உடலியல் ரீதியான பயிட்சிகளை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இளைஞர் முகாம் தங்குமிட வசதியுடன் இடம் பெற்றது.
இன்று ஞாயிற்றுக்கிழமை இறுதி நாள் கருத்தமர்வும் கலந்தாலோசிப்பும் இடம்பெற்றது.
இந்த இளைஞர் முகாமில் ஆரம்ப நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வன்னி மாகாண பணிப்பார் என்.எம்.முனவ்பர் , மாவட்ட உதவி பணிப்பாளர் எம். மஜித் , மன்னார் தேசிய இளைஞர் மன்றத்தின் தேசிய பிரதிநிதி யோசப் நயன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
குறித்த கருத்தரங்கத்தில் மன்னார் மாவட்ட வைத்தியர்கள் மற்றும் பிராந்திய உத்தியோகஸ்தர்களும் இடர் முகாமைத்துவ அதிகாரிகள் , யோக பயிட்சியாளர்கள் , விரிவுரைகளை வழங்கி ஆளுமை மற்றும் மன வேளிச்சி நோய்கள் மற்றும் விழுமியங்கள் பற்றிய விழிப்புணர்வுகளும் அதே போன்று தொற்றா நோயில் இருந்து எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது தொடர்பான பூரண விளக்கம் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.