குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நல்லிணக்கத்திற்காக தொலைக்காட்சி அலைவரிசை ஒன்று ஆரம்பிக்கப்பட உள்ளது. அரசாங்கத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த தொலைக்காட்சி அலைவரிசை உருவாக்கப்பட உள்ளதாகவும் தேசிய ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் மூன்றாம் அலைவரிசையாக இந்த தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் ஊடகப் பிரதி அமைச்சர் கருணாரட்ன பரணவிதாரன தெரிவித்துள்ளார்.
இந்த அலைவரிசை வடக்கிலிருந்து செயற்பட உள்ளதாகவும் இந்த அலைவரிசை வடக்கையும் தெற்கையும் இணைக்கும் வகையில் அமையும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. நல்லிணக்கத்தை நோக்கிய பயணத்தில் குரோத உணர்வுகளைத் தூண்டும் செயற்பாடுகளுக்கு கடுமையான தண்டனை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
1 comment
நல்லிணக்கத்திற்கான தொலைக்காட்சி அலைவரிசை வடக்கிலிருந்து செயற்பட உள்ளதெனக் கூறும் ஊடகப் பிரதி அமைச்சர் திரு. கருணாரட்ன பரணவிதாரன, ‘அது யாருக்கு அதிகம் தேவை’, என்பதைக் கணிப்பதில் தவறிழைத்துள்ளார், என்றே சொல்ல வேண்டும்! மிகவும் ஆரோக்கியமான இச் சிந்தனைக்குச் சகல தரப்பினரும் பூரண ஆதரவு வழங்குவது, அத்தியாவசியமானது
உண்மையாகவே நல்லிணக்கம் தொடர்பான விழிப்புணர்வு, பெரும்பான்மைச் சிங்கள மக்களுக்கே அதிகம் தேவைப்படுகின்றது! இச் செயலை இனவாதக் கருத்தாகப் பார்க்காது, யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்! இல்லாது போனால், இதுவே இனவாதத்தைப் பரப்பும் ஒரு அலைவரிசையாக மாறினாலும், ஆச்சரியமில்லை!
நல்லது நடக்குமென நம்புவோம்!