குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்க துணை ஜனாதிபதி இலங்கை ஜனாதிபதியுடன் தொலைபேசி ஊடாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அண்மையில் அமெரிக்காவில் நடைபெற்று முடிந்த தேர்தலில் துணை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட மயிக் பென்ஸ், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்றைய தினம் தொலைபேசி ஊடாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இரு தரப்பு உறவுகள் குறித்து இந்த உரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. புதிய ஜனாதிபதி ட்ராம்ப்பின் ஆட்சிக் காலத்தில் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது குறித்து இந்த உரையாடலின் போது பேசப்பட்டுள்ளது எனவும் இலங்கையின் எதிர்கால அபிவிருத்திக்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்கப்படும் என அமெரிக்க துணை ஜனாதிபதி உறுதியளித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவிற்கு விஜயம் செய்யுமாறும் இலங்கை ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.