சிரியாவின் தென்மேற்கு பகுதியில் ஐஎஸ் அமைப்பினர் 30க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளை பணயக்கைதிகளாக கைது செய்து வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிரியாவின் ட்ரூஸ் என்னும் சிறுபான்மை இனத்தினர் அதிகம் வசிக்கும் சுவெய்டா (Suwayda) பிராந்தியத்தில் கடந்த வாரம் தாக்குதல் மேற்கொண்ட ஐஎஸ் அமைப்பினர் அதன் போது இவர்களையும் பயணக்கைதிகளாக கொண்டு சென்றிருக்கலாம் என கருதப்படுகின்றது.
சுவெய்டா பிராந்தியத்தின் பெரும்பான்மையான பகுதி சிரியா அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள அதேவேளை சிறியளவிலான பகுதி ஐஎஸ் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.
பிரித்தானியாவினை மையமாக கொண்டியங்கும் எஸ்ஓஎச்ஆர் என்னும் கண்காணிப்பு அமைப்பு குறைந்தபட்சம் 36 பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தப்பட்டிருக்கலாம் என அதன் இணையத தளத்;தில் தெரிவித்துள்ளது. மேலும் சில பெண்கள் தப்பிக முயற்சித்ததாகவும் அதன் போது இருவர் உயிரிழந்தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐஎஸ் அமைப்பினரின் கட்டுப்பாட்டிலிருந்த 98 சதவீத பகுதிகள் மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவத்தின் அறிக்கையில், தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் சிரியாவின் சுவெய்டா, டேரா போன்ற பிராந்தியங்களிலும், அந்நாட்டின் கிழக்கு பகுதிலுள்ள பிராந்தியங்களில் ஐஎஸ் அமைப்பினரின் ஆதிக்கம் இன்னமு;ம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.