Home இலங்கைகொக்குவில் வீதியில் கைவிடப்பட்டிருந்த, இலக்கத் தகடு மறைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்பு….

கொக்குவில் வீதியில் கைவிடப்பட்டிருந்த, இலக்கத் தகடு மறைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்பு….

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

இலக்கத் தகடுகள் துணியால் மறைத்துக் கட்டப்பட்டு வீதியில் கைவிடப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று யாழ்ப்பாணம் காவற்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. கொக்குவில் பகுதியில் இன்று (30.07.18) மாலை இந்த மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டதாகப் காவற்துறை  தகவல்கள் தெரிவித்தன.

கொக்குவில் ஞான பண்டிதா பாடசாலைக்கு அண்மையில் வீடொன்றுக்குள் புகுந்த 8 பேர் கொண்ட கும்பல், அங்கு ஹஏஸ் வாகனத்துக்கு தீவைத்துடன், அங்கிருந்த பொருள்களைச் சேதப்படுத்தித் தப்பித்தது.

இந்த வன்முறையை அரங்கேற்றிவிட்டுத் தப்பித்த கும்பலின் மோட்டார் சைக்கிளாக இது இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. வீதியில் விபத்து ஏற்பட்டதும் மோட்டார் சைக்கிளை கைவிட்டுத் தப்பித்திருக்கலாம் என்ற அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று காவற்துறைத்  தகவல்கள் மேலும் தெரிவித்தன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More