முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் உரை தொடர்பில், எடுக்கப்படவேண்டிய சட்ட நடவடிக்கை குறித்து ஆராய்வதற்கு, சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதியாக, மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் ஒருவரை சட்டமா அதிபர் நியமித்துள்ளார்.
உத்தியோகபூர்வப் பணி’ ஜனாதிபதி மக்கள் சேவை – தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின், யாழ். மாவட்டத்துக்கான 8ஆவது வேலைத்திட்டம், யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் ஜூலை மாதம் 2 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.அதில் கலந்துகொண்டு உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், “தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில், எப்படி இருந்தோம் என்பதை உணர்வுபூர்வமாக உணரும் நிலையில் இருக்கிறோம். இன்றுள்ள நிலையில் விடுதலைப் புலிகளை மீள உருவாக்க வேண்டியதே எமது முக்கிய நோக்கம்” என்று தெரிவித்திருந்தார். இதனை அடுத்து எழுந்த கடுமையான விமர்சனங்கள், கண்டனங்களை அடுத்து தனது அமைச்சுப் பொறுப்பை இராஜினாமாச் செய்ய வேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.