535
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்.பாலகதிர்காம ஆடிவேல் பவணி இன்றைய தினம் புதன்கிழமை இரவு ஆலயத்தை சென்றடைந்தது. பால கதிர்காம ஆலய தீர்த்தோற்சவத்தை அடுத்து ஆடிவேல் பவணி வருடாந்திரம் நடைபெற்று வருகின்றது. ஆலயத்தில் இருந்து தொடங்கும் வேல் பவணி மூன்று நாட்கள் யாழ் நகர் பகுதியை சுற்றி ஆலயத்தை சென்றடையும்.
இம்முறை கடந்த 30ஆம் திகதி ஆலயத்தில் இருந்து புறப்பட்ட வேல் பவணி, நல்லை ஆதீனம் , வீரமாகாளியம்மன் ஆலயம் , வண்ணை வைத்தீஸ்வரன் ஆலயம் , நாச்சிமார் அம்மன் ஆலயம் , கொக்குவில் மஞ்சவனபதி முருகன் ஆலயம் மற்றும் திருநெல்வேலி சிவகாம சுந்தரி அம்மன் ஆலயம் சென்று இன்றைய தினம் மீண்டும் ஆலயத்தை வேல் பவணி சென்றடைந்தது.
இறுதிநாளான இன்றைய நாளில் பாரம்பரிய கலைகளான காவடியாட்டம் , கரகாட்டம் , குதிரையாட்டம் , பாம்பாட்டம் , பொம்மலாட்டம் , மயிலாட்டம் , புலியாட்டம் , கம்படி சிலம்படி தீப்பந்த விளையாட்டு என்பவற்றுடன் வேல் பவணி ஆலயத்தை சென்றடைந்தது.
Spread the love