இலங்கைக்கு சீனா 1 பில்லியன் டொலர் கடன் உதவி அளித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசாமி தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கருத்து வெளியிட்ட இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசாமி இலங்கைக்கு சீனா ஒரு பில்லியன் டாலர் கடன் உதவி அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்தக் கடனுக்கு சீன வங்கி 5.25 சதவிகிதம் வட்டி விதித்துள்ளதாகவும், கடனை திருப்பி செலுத்த 8 ஆண்டுகள் கால அவகாசம் அளித்துள்ளதாகவும் தெரிவித்த அவர், அதில் 3 ஆண்டுகள் சலுகை காலமாக சீனா அளித்துள்ளாதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது. இலங்கைக்கு சீனா 1 பில்லியன் டாலர் கடன் உதவி அளித்துள்ளதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மேலும் வலுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது