வங்கிக்கடன் மோசடி குற்றவாளியான வைர வியாபாரியான நிரவ் மோடியை கைது செய்து இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு இங்கிலாந்திடம் இந்திய மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மும்பையில் உள்ள பஞ்சாப் நஷனல் வங்கி கிளை மூலம் சுமார் 13 ஆயிரம் கோடி ரூபா மோசடியில் ஈடுபட்ட நிரவ் மோடி தப்பிச்சென்றறு தற்போது இங்கிலாந்தில் வசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
எனவே அவரை கைது செய்து இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு இங்கிலாந்து அரசிடம் மத்திய அரசு முறைப்படி கேட்டுக்கொண்டு உள்ளதாக இந்திய வெளியுறவுத் துணை அமைச்சா மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
இதற்கான சிறப்பு கடிதத்தை லண்டனில் உள்ள இந்திய தூதரகத்துக்கு அனுப்பி வைத்துள்ள மத்திய அரசு, அதை இங்கிலாந்து அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு தூதரக அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.