Home பிரதான செய்திகள்இலங்கைக்கெதிரான மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியிலும் தென்னாபிரிக்க அணி வெற்றி

இலங்கைக்கெதிரான மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியிலும் தென்னாபிரிக்க அணி வெற்றி

by admin


தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியிலும் தென்னாபிரிக்க அணி வெற்றியீட்டியுள்ளது. இன்றையதினம் கண்டி பல்லேகல மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்ததனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 50 ஓவர்கள் நிறைவில் 07 விக்கட்டுக்களை இழந்து 363 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இதனைத் தொடர்ந்து 364 என்ற வெற்றி இலகுடன் களமிறங்கிய இலங்கை அணி 45.2 ஓவர்களில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 285 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.  இந்நிலையில் இலங்கை அணியுடன் இடம்பெற்ற மூன்று போட்டிகளிலும் வென்று தென்னாபிரிக்க அணி முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More