அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ பகுதியில் வீடொன்றினுள் அடைத்து வைக்கப்பட்டிருந்த 11 குழந்தைகள் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட குழந்தைகள் 1 முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் அவர்களுக்கு சிறிதளவு உணவும் நீரும் மட்டுமே வழங்கப்பட்டிருந்ததாகவும் அவர்கள் மிகவும் சோர்வடைந்த நிலையில் காணப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் குழந்தைகளை கடத்தியவர்கள் என்னும் சந்தேகத்தின் பேரில் இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட குழந்தைகள் அனைவரும் பட்டினியால் பாதிகப்பட்டு மூன்றாம் உலக அகதிகள் போல காணப்பட்டனர் எனவும் தனது 30 ஆண்டுகால அனுபவத்தில் இப்படியான ஒரு சூழ்நிலையை எதிர்கொண்டது இல்லை எனவும் அப்பகுதியின் தலைவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.