164
தென் சூடான் அரசாங்கமும், அந்நாட்டின் முக்கியமான போராட்டக் குழு ஒன்றும் அதிகாரத்தை பகிர்ந்துக் கொள்ளும் அமைதி ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளனர். இந்த ஒப்பந்தம் மூலம் அந்நாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளாக நடைபெற்று வந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வந்துள்ளது. இந்த மேலும் குறித்த அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதன் மூலம் போராட்டக் குழுவின் தலைவரான ரீக் மச்சர் (Riek Machar ) என்பவர் துணை ஜனாதிபதியாகவுள்ளார். இந்த உள்நாட்டுப் போர் காரணமாக ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love