Home இந்தியாகேரளாவில் தொடரும் கனமழையால், பலியானோரின் எண்ணிக்கை 26-ஆக உயர்ந்துள்ளது…

கேரளாவில் தொடரும் கனமழையால், பலியானோரின் எண்ணிக்கை 26-ஆக உயர்ந்துள்ளது…

by admin

தத்தளிக்கும் கேரளா - கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 26-ஆக உயர்வு

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 15 வருடங்களில் இல்லாத அளவுக்கு, கடும் கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கேரளாவில் உள்ள அணைகள் மற்றும் ஏரிகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. பெரியாறு நதியில் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறுவுறுத்தப்பட்டுள்ளனர். மாநிலத்தில் பல பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. ஏராளமான வீடுகள் இடிந்து விட்டன. விவசாய பயிர்களும் மழையால் நாசமடைந்துள்ளது.
முழு கொள்ளளவை எட்டியுள்ள இடுக்கி அணை 26 வருடங்களுக்கு பின் திறக்கப்பட்டுள்ளதால் ஆற்றங்கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டனர். மீட்புப் பணிக்காக பேரிடர் மீட்பு குழு, ராணுவம் மற்றும் கப்பற்படை வீரர்கள் கேரளா விரைந்துள்ளனர்.
இடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26-ஆக உயர்ந்துள்ளது.
கனமழை காரணமாக இடுக்கி, கொல்லம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் 5 கோடி நிவாரண உதவி அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கர்நாடக முதல் அமைச்சர் குமாரசாமி, கனமழையால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு 10 கோடி ரூபாய் நிதியுதவி அளித்து உத்தரவிட்டுள்ளார்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More