குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
மடு தேவாலயத்திற்குச் சொந்தமான வைத்தியசாலைக்கான புதிய கட்டிடத் தொகுதி நேற்று (9.08.18) வியாழக்கிழமை காலை மடு பகுதியில் திறந்து வைக்கப்பட்டது.
மத்திய அரசு வழங்கிய நிதியுதவியுடன் மன்னார் மறை மாவட்ட நிதிப் பங்களிப்போடு இப் புதிய கட்டிடம் அமைக்கப்பட்டு வைபவ ரீதியாக திறந்த வைக்கப்பட்டது. நேற்று(9) காலை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலா நிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களால் இக் கட்டிடத் தொகுதி ஆசீர்வதித்துத் திறந்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க ஆதிபர் சி.ஏ.மோகன்றாஸ், மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்பணி.அ.விக்ரர் சோசை, மடு திருத்தலத்தின் தற்போதைய பரிபாலகர் அருட்பணி. ச.எமிலியானுஸ்பிள்ளை, மடு திருத்தலத்தின் புதிய பரிபாலகர் அருட்பணி ச.பெப்பி சோசை ,அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள் நலன் விரும்பிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
மடுத்திருத்தல நிர்வாகத்தின் கீழ் திருச்சிலுவைக் கன்னியர் சபை அருட்சகோதரிகளால் மடுத் திருத்தல வைத்தியசாலை இயக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத் தக்கது. ஏற்கனவே உள்ள கட்டிடத் தொகுதியில் இடப் பற்றாக்குறை இருப்பதால் இப் புதிய கட்டடிடத் தொகுதி அமைக்கப்பட்டுள்ளது.
இக்கட்டிடத் தொகுதியில் நோயாளர் தங்கியிருந்து சிசிச்சை பெறும் பிரிவு, வைத்தியர்கள் நோயாளரைப் பார்வையிடும் பகுதி, மருந்தகம், சிறப்புச் சிசிச்சைப் பிரிவு, வைத்தியர்களுக்கான தங்குமிடம் என்பன புதிய வசதிகளோடு அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதத்க்கது.