தமிழ்தேசிய கூட்டமைப்பின் சார்பில் வடமாகண முதலமைச்சர் வேட்பாளராக யாரை நிறுத்தப்போகின்றீர்கள் என்பதை விரைந்து அறிவியுங்கள் என புளொட் டெலோ ஆகிய கட்சிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
குறிப்பாக அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் நிலவிவருகின்றன இது தொடர்பில் சம்பந்தன் தீர்க்கமான அறிவிப்பை வெளியிடவேண்டும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், இரு கட்சிகளும் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளதாக கூறப்படுகிறதுஅத்துடன் விக்னேஸ்வரனிற்கு மக்கள் செல்வாக்கு பெருமளவு காணப்படுவதாகவும், புளொட் டெலோ ஆகிய கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளதோடு, தற்போதைய முதலமைச்சர் கட்சியிலிருந்து வெளியேறும் பட்சத்தில் பாரிய பின்னடைவுகள் ஏற்படலாம் எனவும் எச்சரித்துள்ளதாகவும் கூட்டமைப்பின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பந்தனும் விக்கியும் தொடர் இரகசிய சந்திப்பில் ஈடுபட்டு வருகின்றனரா?
தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், வடமாகண முதல்வர் விக்கினேஸ்வரனை தொடர்ச்சியாக சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார் என கொழும்பில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.
சட்டத்தரணி கனக ஈஸ்வரனின் வீட்டில் இந்த சந்திப்புகள் இடம்பெறுவதாக வெளியாகிய தகவல்கள் குறித்து, தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டத்தில் அந்த கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சியின் உறுப்பினர் ஒருவர் சம்பந்தனிடம் கேள்வி எழுப்பியுள்ளதாக தெரியவருகிறது.
அந்த வகையில் “விக்னேஸ்வரனை தொடர்ச்சியாக சந்தித்து பேச்சுவார்த்தைகளில் நீங்கள் ஈடுபடுவதாக அறிந்துள்ளோம், இது உண்மையா தொடர்ச்சியாக அவருடன் என்ன பேசி வருகின்றீர்கள்” என அந்த உறுப்பினர் கேள்வி எழுப்பியுள்ளார். எனினும் இதற்கு சம்பந்தன் பதில் அளிக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
1 comment
விக்னேஸ்வரனிற்கு மக்கள் செல்வாக்கு பெருமளவு காணப்படுகின்றது. அவர் கட்சியிலிருந்து வெளியேறும் பட்சத்தில் பாரிய பின்னடைவுகள் ஏற்படலாம் மற்றும் தன் சுயநலங்கள் பாதிக்கப்படும் என்று நினைத்து விக்கினேஸ்வரனுடன் சம்பந்தன் குள்ளத்தனமாக பேச்சுவார்த்தைகளை நடத்துகிறார் என்று நினைக்கின்றேன்.