Home இந்தியாகேரள கனமழை – முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் வழங்கிய சூர்யா, கார்த்தி…

கேரள கனமழை – முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் வழங்கிய சூர்யா, கார்த்தி…

by admin

தொடர் மழை காரணமாக கேரளா வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நடிகர்களான சூர்யா, கார்த்தி இணைந்து ரூ.25 லட்சம் நிவாரணத் தொகையை அன்பளிப்பாக வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளமை காரணமாக, கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இதனால் நீர்நிலைகள்உயர்ந்து வருகின்றன. இதனால் ஒரே நேரத்தில் 22 அணைகள் திறந்து விடப்பட்டுள்ளன. பல்வேறு பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டு பல வீடுகள் கட்டிடங்கள் இடிந்த நிலையில் காணப்படுகின்றன.

இதுவரையில் இவ் அனர்த்தம் காரணமாக 30இற்க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இராணுவம், கப்பற்படை மற்றும் அனர்த் மீட்புக்குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் பினராயி விஜயன் இன்று வானூர்தியில் சென்று பார்வையிட்டார்.

தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் கேரளாவுக்கு நிவாரணத் தொகையை அறிவித்துள்ளன. இந்த நிலையில், நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து கேரளா முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More