நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக சியாளராக ஹரி ஸ் ரீட் ( Gary Steed ) நியமிக்கப்பட்டுள்ளார். அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த மைக் ஹஸ்சன் கடந்த ஜூன் மாதம் பதவிவிலகியிருந்தநிலையில் புதிய பயிற்சியாளராக நியூசிலாந்தின் முன்னாள் வீரரான ஹரி ஸ் ரீட் நேற்றையதினம் நியமிக்கப்பட்டுள்ளார்.
46 வயதான ஹரி ஸ் ரீட்டுடன் 2 வருடகால ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாத இறுதியில் நியூசிலாந்து அணி, ஐக்கிய அரபு அமீரகத்தில் பாகிஸ்தான் அணியுடன் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் விளையாடவுள்ள நிலையில் அதிலிருந்து ஹரி ஸ் ரீட்டின் பயிற்சியாளர் பணி ஆரம்பமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.