இத்தாலியின் லேகுரியா பிராந்தியத்தில் 12 மாத கால அவசரகாலநிலை அந்நாட்டு பிரதமர் ஜோசப்பே கோண்டேயினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலியின் வடமேற்கு பகுதியில் இருக்கும் ஜெனோ நகரில் உள்ள லேகுரியா பிராந்தியத்தில் மே;பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் 26 பேர் உயிரிழந்திருந்த நிலையில் அப்பிராந்தியத்தில் இவ்வாறு அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
மலைகளுக்கு இடையில் பிரபல தொழிற்பேட்டை அருகே அமைந்துள்ள ஏ10 நெடுஞ்சாலையில் இருக்கும் மேம்பாலத்தின் சுமார் 200 மீட்டர் நீளமான பகுதி சுமார் 100 அடி ஆழத்தில் நொறுங்கி விழுந்ததால் அவ்வழியாக சென்ற பல வாகனங்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியதல் இவ்வாறு உயிரிழப்புகள் ஏற்பட்டிருந்தன.
மேலும் இதனால் அப்பகுதயில் ஏற்பட்டுள்ள இழப்புகளை சமாளிக்க முதல்கட்டமாக 5 மில்லியன் யூரோ நிதி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.