Home இலங்கைஓட்டமாவடி வைத்தியசாலைக்குஒரு கோடி ரூபா நிதி ஒதுக்கீடு…

ஓட்டமாவடி வைத்தியசாலைக்குஒரு கோடி ரூபா நிதி ஒதுக்கீடு…

by admin

ஓட்டமாவடி, மீறாவோடை கிராமிய வைத்தியசாலைக்கு மூன்று மாடிக் கட்டடம் ஒன்றை நிர்மாணிப்பதற்காக சுகாதார, போசாக்கு மற்றும் சுதேச பிரதி அமைச்சர் பைசல் காசீம் ஒரு கோடி ரூபா நிதியை ஒதுக்கியுள்ளார். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்குடா தொகுதி முக்கியஸ்தர் மொஹம்மட் ஹலால்தீனின் கோரிக்கைக்கு அமைய இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியை ஒதுக்கியமைக்கான ஆவணங்கள் அனைத்தையும் பிரதி அமைச்சர் பைசல் காசீம் நேற்று முன்தினம்  [15.08.2018] முஹம்மட் ஹலால்தீன் மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபையின் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் அன்வர் ஆகியோரிடம் அவரது அமைச்சில் வைத்துக் கையளித்தார்.

கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு வைபவம் விரைவில் தொடங்கப்படும்.மேலும்,இந்த வைத்தியசாலையை முழுமையாக அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கையை பிரதி அமைச்சர் மேற்கொண்டுள்ளதோடு இது தொடர்பில் தேசிய திட்டமிடல் திணைக்கள அதிகாரிடமும் பணிப்புரை விடுத்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More