Home சினிமாநயன்தாராவின் புதிய சாதனை

நயன்தாராவின் புதிய சாதனை

by admin


அண்மையில் வெளியாகியுள்ள கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் நடிகை நயன்தாரா புதிய சாதனை படைத்துள்ளார். நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட கோலமாவு கோகிலா குறித்தது சகல பக்கங்களில் இருந்து சிறப்பான விமர்சனங்களே தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், யோகிபாபு நயன்தாரா நடித்துள்ள இந்தப்படம் மிகச்சிறந்த நகைச்சுவைத் திரைப்படமாக வெளியாகியுள்ளநிலையில் மிகப்பெரிய கதாநாயகர்களுக்கு நிகரானா ஆரம்பம் நயன்தாராவுக்கு கிடைத்துள்ளது. மேலும், இதுவரை எந்த நடிகையின் திரைப்படமும் முதல் நாள் காலைக்காட்சியில் திரையிடப்பட்டதில்லை என்னும் நிலையில் நயன்தாரா அதனை ஆரம்பித்து வைத்துள்ளார். முதல்நாளில் திரையரங்குகளில் எட்டு மணி காட்சியில் கோலமாவு கோகிலா திரையிடப்பட்டது.

இதற்கு முன்பு அகில உலக சூப்பர் ஸ்டார் மிர்ச்சி சிவா நடித்த தமிழ்ப்படம் 2 திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.  கோலமாவு கோகிலா திரைப்படத்தில் நயன்தாரா, யோகிபாபு, சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் நடித்துள்ளதுடன் அனிருத் இசையமைத்துள்ளார். லைகா புரடொக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More