Home இலங்கைசக்திமிக்கவர்களாக விளங்கிய  புலிகளைக் கட்டுப்படுத்த, வாஜ்பாய் உதவினார்:

சக்திமிக்கவர்களாக விளங்கிய  புலிகளைக் கட்டுப்படுத்த, வாஜ்பாய் உதவினார்:

by admin

சக்திமிக்கவர்களாக விளங்கிய  தமிழீழ  விடுதலைப் புலிகளை கட்டுப்படுத்த முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாய் இலங்கைக்கு உதவியதாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள இந்திய தூதூதர் அலுவலகத்தில் முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தும் பதிவேட்டிலும்  இதனை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதிவு செய்துள்ளார்.  குறித்த நிகழ்வின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் சக்தி வாய்ந்த விடுதலை புலிகளை கட்டுப்படுத்த தான் பிரதமராக இருந்த காலத்தில் வாஜ்பாய் உதவியாக கூறினார். அத்துடன் விடுதலைப் புலிகளின் கடல் செயற்பாடுகளை கட்டுப்படுத்த வாஜ்பாய் அரசாங்கம் உதவியதாகவும் அவர் தெரிவித்தார். இதேவேளை இலங்கை பொருளாதார நெருக்கடிகளை எதிர் கொண்ட சந்தர்ப்பங்களில் எல்லாம் வாஜ்பாய் அரசாங்கம் இலங்கை கை கொடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More