Home உலகம்19 வயதான அனைவருக்கும் கட்டாய ராணுவப் பயிற்சி – மொரோக்கோவில் புதிய சட்டம்

19 வயதான அனைவருக்கும் கட்டாய ராணுவப் பயிற்சி – மொரோக்கோவில் புதிய சட்டம்

by admin

வடமேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான மொரோக்கோவில் 19 முதல் 25 வயதுக்குட்பட்ட ஆண்-பெண்களுக்கு கட்டாய ராணுவப் பயிற்சி அளிக்கும் சட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  மொரோக்கோவில் ஆறாம் முஹம்மது தலைமையிலான மன்னராட்சி நடைபெற்று வருகின்ற நிலையில் அரசு மற்றும் முப்படைகளின் தலைவராக மன்னர் விளங்கி வருகிறார்.

அந்நாட்டின் பாராளுமன்றத்தில் இரு அவைகள் உள்ள நிலையில் பாராளுமன்றத்துக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களில் இருந்து பிரதமர் தேர்வு செய்யப்படுகிறார். ஆட்சி நிர்வாகத்தை பிரதமரால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை நடத்தி வருகிறது. சாடெடைன் ஒத்மானி தற்போது பிரதமர் பதவியை வகித்து வருகிறார்.சுமார் மூன்றரை கோடி மக்கள் வாழ்ந்துவரும் மொரோக்கோவின் முதன்மை மதமாக இஸ்லாம் உள்ளது. மக்கள்தொகையில் பெரும்பான்மையானவர்கள் அராபிய – பெர்பர் வம்சாவளியினராவார்கள்.

அந்நாட்டில் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கியுள்ள பகுதியில் வேலைவாய்ப்பு மற்றும் உதவித்தொகை கேட்டு வலியுறுத்தி சமீபகாலமாக போராட்டங்கள் பெருகி வருகின்றன. இது மன்னருக்கு எதிரான புரட்சியில் முடியலாம் என அந்நாட்டு அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில், போராட்ட உணர்வுகளை குறைப்பதற்கும், நாட்டுப்பற்றை அதிகரிக்கச் செய்யும் வகையிலும், மக்களுக்கான உரிமைகள் மற்றும் பொறுப்புகளை புரிய வைக்கவும் 19 முதல் 25 வயதுக்கு இடையிலான ஆண்-பெண் இருபாலருக்கும் கட்டாயமாக ஓராண்டு காலத்துக்கு ராணுவ பயிற்சி அளிக்கும் சட்ட முன்வரைவுக்கு மொராக்கோ அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More