Home பிரதான செய்திகள்இங்கிலாந்துடனான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி

இங்கிலாந்துடனான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி

by admin


நொட்டிங்ஹாமில் நடைபெற்ற இங்கிலாந்து அணியுடனான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 203 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.  இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 521 ஓட்டங்கள் வைக்கப்பட்ட நிலையில் நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 9 விக்கெட் இழப்பிற்கு 311 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இந்நிலையில் இன்று ஐந்தாவது நாள் ஆட்டம் ஆரம்பமாகியநிலையில் இங்கிலாந்து கடைசி விக்கெட்டினையும் இழந்து தோல்வியடைந்துள்ளது.இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-2 என உள்ளது . 4-வது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 30திகதி சவுத்தாம்ப்டனில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More