சங்கத்தானையில் இருவர் பலி…
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோட்டர் சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளனர். இலங்கை நேரம் இன்று இரவு 7 மணி அளவில் சாவகச்சேரி, சங்கத்தானை புகையிரத கடவையில் இடம்பெற்ற இந்த விபத்தில் மட்டுவிலைச் சேர்ந்த 22 வயதுடைய மார்க்கண்டு சுலக்சன், 23 வயதுடைய மகாதேவா சுஜீவன் ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.
இரு இளைஞர்களும் மோட்டார் சைக்கிளில் வேலைக்குச் சென்று மீண்டும் வீடு திரும்பிய வேளை, கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த புகையிரதம் சங்கத்தானைப் பகுதியை அண்மித்த போது,
புகையிரத கடவையில் பொருத்தப்பட்டுள்ள சமிஞ்ஞை விளக்கு எரிந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. எனினும் புகையிரதம் அண்மித்த தூரத்தில் சென்று கொண்டிருந்த போதும், அதிவேகமாக புகையிரத கடவையினை கடக்க முற்பட்ட வேளையிலேயே இந்த விபத்து இடம்பெற்றதாக அப்பகுதியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.