தலீபான் அமைப்புக்காக நிதி திரட்டிய பாகிஸ்தானை சேர்ந்த இஸ்மாயில்கான் என்பவருக்கு 10 வருட கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் 1 லட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. தலீபான் அமைப்புக்காக நிதி திரட்டுவதாக கிடைத்த முறைப்பாடுகளையடுத்து இஸ்மாயில் கானை கைது செய்த பயங்கரவாத தடுப்பு படையினர் அவர் மீது பயங்கரவாத தடுப்பு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர்.
வழக்கு விசாரணை முடிவில், இஸ்மாயில் கான் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்த நீதிபதி , அவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.
அபராதம் செலுத்தத் தவறினால், மேலும் 6 மாதம் கடுங்காவல் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.