யூத குடியேற்றங்களுக்காக ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் ஆயிரம் புதிய வீடுகளை கட்ட இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. 382 புதிய வீடுகள் கட்ட இறுதி ஒப்புதல் வழங்கப்பட்டுவிட்ட நிலையில் ஏனைய வீடுகள் கட்டுவதற்கான செயல்திட்டம் ஆரம்பநிலையில் உள்ளது. சர்வதேச சட்டத்தின்படி இந்த குடியேற்றங்கள் சட்டத்திற்கு புறம்பானது என்ற போதிலும் இஸ்ரேல் இதனை ஏற்க மறுத்துள்ளது.
பாலத்தீனியர்கள் தங்களுக்கு சொந்தமான நிலம் எனத் தெரிவிக்கும் மேற்கு கரை மற்றும் கிழக்கு ஜெரூசலேம் பகுதிகளில் இஸ்ரேல் 1967 ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட 140 குடியேற்றங்களில் 60,000 யூதர்கள் வசிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.