சிம்பாப்வே கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக லால்சந்த் ராஜ்புட் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் சிம்பாப்வேயில் நடைபெற்ற உலகக்கிண்ணத்துக்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் சிம்பாப்வே அணி தோல்வியடைந்தது. இதனால் அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபௌவுள்ள உலகக்கிண்ணப் போட்டியில் பங்கேற்கும் தகுதியை இழந்துள்ளது.
இதனால் சிம்பாப்வே அணியின் தலைவர் , பயிற்சியாளர்கள் உள்பட பலர் நீக்கப்பட்டநிலையில் கடந்த ஜூன் மாதம் இந்தியாவின் முன்னாள் வீரரான லால்சந்த் ராஜ்புட் இடைக்கால பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தற்போது லால்சந்த் ராஜ்புட் நிரந்தர தலைமை பயிற்சியாளராக அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏதிர்வரும் செப்டம்பர்-நவம்பர் மாதத்தில் சிம்பாப்வே தென்ஆப்பிரிக்கா மற்றும் பங்களாதேஸ் சென்று விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது