Home இந்தியாகூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு

by admin

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு மற்றும் அணு கழிவுகளை நீக்குவது தொடர்பான வழக்கின் விசாரணையை நீதிமன்றம் 2 வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது.  கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு மற்றும் அணு கழிவுகளை நீக்குவது தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் தலைவர் ஜி.சுந்தரராஜன் உச்சநீதிமன்றில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நேற்று விசாரணைக்கு வந்தது.

இதன்போது அணு கழிவுகளை பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசு தரப்பில் மேலும் 2 வாரங்கள் அவகாசம் கோரி எழுத்து வடிவில் கோரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து குறித்த வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More