பிரேசிலில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறை குற்றங்களின் ஈடுபவர்களை கைது செய்யும் நோக்கத்துடன் நாடு முழுவதும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் போது இவ்வாறு ஆயிரத்துக்கும் மேற்பட்டோரைக் கைது செய்துள்ளதாக பிரேசில் அரசு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் 275 பேர் சந்தேக கொலை குற்றவாளிகளாக கருதப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேசில் முழுவதும் காவல்துறையினர் மேற்கொண்ட இந்த தேடுதல் நடவடிக்கையின் ஆறு ஆயிரத்துக்கும் Nமுற்பட்ட காவல்துறை அதிகாரிகள் பங்கெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரேசிலில் வன்முறை குற்றங்கள் அதிகரித்துள்ளமையினையடுத்து அதிகாரிகளுக்கு ஏற்பட்ட அழுத்தங்களினைத் தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது