நாட்டில் பௌத்த கோட்பாடுகளுக்கு எதிரான படைப்புக்களை உருவாக்க அரசாங்கம் இடமளிப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை தாம் வன்மையான முறையில் நிராகரிப்பதாக நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தலைமையிலான தேசிய நல்லிணக்கத்திற்கும், நல்லிணக்கத்திற்குமான அலுவலகம் தயாரித்த வானொலி நாடகங்களின் பெயர் தொடர்பிலான சர்ச்சை தொடர்பாகவே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதில் ஒரு நாடகம் சமூக சீரழிவு பற்றி பேசுகிறது. இதன் பெயர் சார்ந்த அர்த்தத்தை தவறான முறையில் புரிந்து கொண்டு அரசாங்கத்தின் மீது சேறுபூசும் நடவடிக்கைகளில் சிலர் ஈடுபட்டுள்ளதாகவும் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் குற்றஞ்சாட்டினார்.