Home உலகம்நியூசிலாந்தின் பிரதமர் பதவி விலகுவதாக அறிவிப்பு

நியூசிலாந்தின் பிரதமர் பதவி விலகுவதாக அறிவிப்பு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கடந்த எட்டு ஆண்டுகளாக  பிரதமராக கடமையாற்றியுள்ள நியூசிலாந்தின் பிரதமர் ஜோன் கீ பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.  திடீரென அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் பிரதமர் தனது  பதவிவிலகல்  பற்றி அறிவித்துள்ளார்.

தாம் எடுத்த மிகவும் கடினமான தீர்மானம் இது எனவும் அடுத்ததாக எவ்வாறான நடவடிக்கை எடுப்பது என்பது பற்றி புரியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மனைவி ப்ரோன்காவின் கோரிக்கைக்கு அமைய பிரதமர் பதவி விலகுவதாக அந்நாட்டு பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

2014ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றியீட்டிய ஜோன் கீ மூன்றாம் தடவையாகவே ஆட்சி நடத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 2017ம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலிலும் தம் போட்டியிட உள்ளதாக முன்னதாக அறிவித்திருந்த அவர் எதிர்வரும் 12ம் திகதி உத்தியோகபூர்வமாக பதவி விலக உள்ளதாகவும், குடும்ப சூழ்நிலை காரணமாக பதவி விலகுவதாகவும் அறிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More