சிரியா மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையே ராணுவம் தொடர்பான புதிய ஒப்பந்தம் ஒன்று இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. சிரியாவில் நடைபெறும் உள்நாட்டு போரில் அந்நாட்டு அரசுக்கு ஆதரவாக ஈரான் இராணுவத்தினர் போரிட்டு வருகின்றனர்.
அண்மையில் சிரியாவில் இருக்கும் ஈரான் படைகளை திரும்ப பெற வேண்டும் என அமெரிக்கா அறிவுறுத்தி இருந்த நிலையில் ஈரான் அதற்கு மறுப்புத் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், நேற்றையதினம் சிரியா சென்ற ஈரானின் பாதுகாப்பு அமைச்சர் அமிர் ஹடாமி சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாத் மற்றும் சிரேஸ் இராணுவ அதிகாரிகளை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். இந்த பேச்சு வார்த்தையின் முடிவில், இரு நாடுகளுக்கு இடையே இராணுவ ஒத்துழைப்பு தொடர்பாக புதிய ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.