குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
நல்லூர் மகோற்சவ திருவிழாக்கு சென்ற இளைஞனை காணவில்லை என தாயாரால் யாழ்.காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு உள்ளது. யாழ்.கந்தர்மடம் மணல்தரை வீதியை சேர்ந்த 18 வயதுடைய சி. சரண்ராஜ் எனும் இளைஞனையே காணவில்லை என முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு உள்ளது. குறித்த இளைஞன் கல்வியங்காட்டு பகுதியில் உள்ள எரிபொருள் விற்பனை நிலையத்தில் பணியாற்றுபவர் எனவும் தாயாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞன் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டில் நல்லூர் திருவிழாவுக்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்ற இளைஞன் இன்று திங்கட்கிழமை மதியம் வரை வீடு திரும்பாத நிலையில் தாயாரால் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு உள்ளது. முறைப்பாட்டின் பிரகாரம் யாழ். காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்