தண்ணீரை சேமிக்க தமிழகம் முயற்சி செய்யவில்லை என்று கர்நாடக நீர்ப்பாசனத் துறை முதன்மை செயலாளர் ராகேஷ் சிங் முறைப்பாடு தெரிவித்துள்ளார். கடந்த 3 மாதங்களில் தமிழகத்துக்கு 87.3 டி.எம்.சி. நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் எனஉ ச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.எனினும் வெள்ளம் காரணமாக கபிணி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து உபரி நீரை கர்நாடக அரசு திறந்துவிட்டு உள்ளது.
கடந்த 3 மாதங்களில் மட்டும் மொத்தம் 87.3 டி.எம்.சி. தண்ணீர் திறக்க வேண்டும் என்ற போதிலும் கர்நாடக அரசு மொத்தம் 310.6 டி.எம்.சி. நீரை திறந்துவிட்டு உள்ளது. இந்த நீரில் 250 டி.எம்.சி.க்கும் மேலான நீர் வீணாக சென்று கடலில் கலந்து உள்ளது. இந்த நீரை தமிழகம் சேமிக்கவில்லை எனவும் வீணாக நீர் கடலில் சென்று கலந்துள்ளது எனவும் கர்நாடக நீர்ப்பாசனத் துறை முதன்மை செயலாளர் முறைப்பாடு செய்துள்ளார்.